search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் மாயம்"

    மதுரை அருகே வேலைக்கு சென்ற இளம்பெண்கள் மாயமானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மேலூர் அருகே உள்ள சேக்குப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் காளீஸ்வரி (வயது17).

    இவர் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள சித்தப்பா வெய்யமுத்து (30) வீட்டில் தங்கி கூத்தியார்குண்டு பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    தினமும் வீட்டில் இருந்து பஸ்சில் காளீஸ்வரி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 15-ந்தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் காளீஸ்வரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காளீஸ்வரியை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்....

    டி.குன்னத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (25) தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 15-ந்தேதி திடீரென மாயமானார்.

    இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மற்றும் ஒரு கூலி தொழிலாளி என 4 பேர் மாயமாகி உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மற்றும் ஒரு கூலி தொழிலாளி என 4 பேர் மாயமாகி உள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:-

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி. இவரது மகள் முருகேஸ்வரி (வயது19). இவர் கடையநல்லூரில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் முருகேஸ்வரிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர்.

    நாளை மறுநாள் 13-ந்தேதி (புதன்கிழமை) திருமணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அதிகாலையில் வீட்டில் இருந்த முருகேஸ்வரியை காணவில்லை. இது குறித்து அவரது தந்தை பிச்சுமணி கடையநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரியை தேடி வருகிறார்கள்.

    நெல்லை தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். இவரது 17 வயது மகள் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 8-ந்தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து வெங்கட சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாளையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (வயது56). இவரது மனைவி சரஸ்வதி (38). கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி ராதாபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற சரஸ்வதி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. தாய் வீட்டுக்கும் செல்லவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

    இதுகுறித்து சுந்தர்ராஜ் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை தேடி வருகிறார்கள்.

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை அடுத்த தச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது35), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி (33), கடந்த 3-ந்தேதி கூலி வேலைக்கு சென்ற சொக்கலிங்கம் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து ஜெயலட்சுமி, களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சொக்கலிங்கத்தை தேடி வருகிறார்கள்.

    மீஞ்சூர் மற்றும் பொன்னேரியில் 3 பெண்கள் திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த சோமஞ்சேரி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் சோபனா (வயது 15).

    கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்ற சோபனா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருந்ததி நகரைச்சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சரிதா (19). வீட்டில் இருந்து வெளியே சென்ற சரிதா காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி அடுத்த ஆலாடு பூந்தோட்டகாலனியைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி புனிதா (22) கடந்த 23-ந் தேதி புனிதா உடல்நிலை சரிஇல்லாததால் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    சம்பத் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது புனிதாவை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் புனிதா எங்கு சென்றார். என்ன ஆனார் என்று தெரியவில்லை.

    மாயமான 3 பெண்களும் கடத்தப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் மாயமானார்கள். தற்போது பெண்கள் மாயமாகும் சம்பவம் குறைந்து இருந்தது.

    இப்போது பெண்கள் மீண்டும் மாயமாகும் சம்பவம் அதிகரித்து இருப்பது பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. #Tamilnews
    ×